ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

0 3226
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

கொரோனா நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் விவாதித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தலைமைச்செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலம் நடத்தப்படும் இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டங்கள் தோறும் கொரோனாவின்பாதிப்பு நிலவரம், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இனி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்காம் கட்ட ஊரடங்கு நாளைமறுநாளுடன் முடிவடையும் சூழலில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments