சென்னையில் குறையுமா கொரோனா பாதிப்பு ?

0 2515
தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களை தவிர, பெரும்பாலான மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள நிலையில், சென்னையின் நிலைமை மட்டும் கவலைக்குரியதாகவே தொடர்ந்து வருகிறது. இது தொடர்பான ஒரு செய்தி தொகுப்பு.

தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களை தவிர, பெரும்பாலான மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள நிலையில், சென்னையின் நிலைமை மட்டும் கவலைக்குரியதாகவே தொடர்ந்து வருகிறது. இது தொடர்பான ஒரு செய்தி  தொகுப்பு. 

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் ஆரம்ப கட்டத்தில் இருந்த போது, வெளிநாடுகளில் ஏராளமானோர் பலியானதைக் கண்டு, மக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டது.

அதன் காரணமாக கொரானா தொற்று ஏற்படுவதை தடுக்க முககவசம் அணிந்தும், கைகளை அடிக்கடி கழுவியும், தேவையின்றி வெளியில் செல்லாமல் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொண்டனர்.

சென்னையில் குறைந்த அளவே தொற்று இருந்தபோது செய்ததை கூட, தற்போது பாதிக்கப்பட்டோர் அதிகமானோர் உள்ள நிலையில் செய்யாமல், கொரோனா என்ற ஒன்றே இல்லாதது போல் நடந்து வருகின்றனர்.

இதற்கு தொற்று உள்ள பெரும்பாலானோருக்கு எந்தவித நோய் அறிகுறிகளே இல்லாமல் இருப்பதும், குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், இறப்பு விகிதம் குறைவாக இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது.

மேலும் எத்தனை நாட்களுக்கு முக கவசம் அணிவது, கைகளை கழுவுவது என்று சலிப்பு தட்டியதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

சென்னையைப் பொருத்தவரை அதிக மக்கள் தொகை மற்றும் நெருக்கடியான குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் வைரஸ் தொற்று அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.

தற்போது பொது போக்குவரத்து தொடங்கப்படவில்லை என்பதுடன், திரையரங்குகள், மால்கள், ஏசி உள்ள பெரிய கடைகள், பள்ளி கல்லூரிகள், ஓட்டல்கள், சலூன்கள் இயங்குவதற்கான தடை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலை தொடருமா அல்லது மேலும் விலக்கு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கும் அளவிற்கு ஏற்ப, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சேலத்திற்கு கடந்த செவ்வாய்கிழமை விமானத்தில் சென்ற 56 பேரை பரிசோதனை செய்ததில், எந்த தொற்று அறிகுறிகளும் இல்லாமல் இருந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கொரோனா அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும், முதியவர்களுக்கும் வைரஸ் தொற்று பரவும் ஆபத்தை ஏற்படுத்துபவர்களாக உள்ளனர்.

மற்றொரு பக்கம், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் இருந்து ரயில் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவோர் வாயிலாக கொரோனா தொற்று அதிகரிப்பது அரசுக்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை முழுமையாக அடைத்தும், காவல்துறையை வைத்து தீவிரமாக கண்காணித்தும் எந்த தளர்வும் வழங்கப்படாமல் இருந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற கருத்து நிபுணர்களால் முன்வைக்கப்படுகிறது.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க மக்களுக்கு போதிய விழிப்புணர்வும், அதற்கு அவர்கள் ஒத்துழைப்பும் அளித்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை குறைக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments