அடங்க மறுக்கும் கொரோனா.. உச்சம் தொட்ட அச்சம்..!

0 3377

இந்தியாவில் அடங்க மறுக்கும் கொரோனாவால் ஒரே நாளில் 6 ஆயிரத்து 566 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரை, சுமார் 68 ஆயிரம் பேர்
குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

மஹாராஷ்டிராவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அங்கு மட்டும் ஆயிரத்து 897 பேர் உயிரிழந்துள்ளனர்.

2- வது இடம் வகிக்கும் தமிழகத்தில், அடங்க மறுக்கும் கொரோனாவால் பாதிப்பு கணிசமாக உயர்ந்து உள்ளது.

டெல்லியிலும், குஜராத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி விட்டது.

ராஜஸ்தானில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்க, மத்திய பிரதேசத்தில் பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டி உள்ளது. உத்தர பிரதேசத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண் ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

மேற்கு வங்காளம், ஆந்திரா, பீஹார், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தெலங்கானாவில்
கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.

இதுதவிர, ஜம்மு - காஷ்மீர், ஒடிசா, ஹரியானா ஆகிய மாநிலங்களிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 566 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி,பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 544 பேர், கொரோனாவுக்கு இரை ஆகி விட்டனர். அதேநேரம், சுமார் 68 ஆயிரம் பேர், குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments