புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

0 755

புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் அதில் கையெழுத்திட்டுள்ளனர். மின்சாரத்தை தனியார்மயமாக்க மாநில அரசின் நிறுவனங்களை மத்திய அரசு மயமாக்குவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்த கடிதத்தல் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்கள் சட்டமியற்றும் அதிகாரத்தை பறிக்கும் புதிய மின்சார திருத்தச் சட்டம்” 2020-ஐ திரும்ப பெற்றிட வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதே போன்று பிரதமருக்கு கடிதம் எழுதியதை குறிப்பிட்டு, பாஜக மற்றும் பாஜக கூட்டணி அரசு அல்லாத 12 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நில உரிமைகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும்” பாதுகாத்திடும் திமுகவின் முயற்சிக்கு துணை நின்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments