தென்கொரியாவில் மீண்டும் தொற்று பரவும் அபாயம்

0 1247

கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடு என கூறப்படும் தென் கொரியாவில் மீண்டும் தொற்று அலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து தலைநகரான சியோலில், பூங்காக்கள், பொழுது போக்கு இடங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை வரும் 14 ஆம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 5 ஆம் தேதிக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் 79 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் 54 பேர் சியோலின் புறநகர்ப் பகுதியான புச்சியோனை (Bucheon) சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள தென் கொரியாவின் துணை சுகாதார அமைச்சர் கிம் கேங் லிப், புச்சியோன் தொடர்புடைய 4150 பேர் நோய்த்தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தென்கொரியாவில் இதுவரை 11,344 பேருக்கு தொற்று ஏற்பட்டு அவர்களில் 269பேர் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments