மகேந்திர சிங் தோனி ஓய்வு குறித்த தகவல் வதந்தி-தோனியின் மனைவி ஷாக்சி

0 1766

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி ஒய்வு குறித்த தகவல் வதந்தி என அவரது மனைவி சாக் ஷி மீண்டும் மறுத்துள்ளார்.

நீண்ட நாள்களாக கிரிக்கெட் அணியில் இடம்பெறாமல் தோனி  இருப்பதால், அவர் ஓய்வுபெற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியபடி இருக்கின்றன.

ட்விட்டரில் தோனி  ரிடையர்ஸ் என்ற ஹேஸ்டேக் (hashtag #DhoniRetires) பரவி புதன்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக்கண்ட சாக் ஷி, அந்த பதிவில் உள்ள தகவல் வதந்தி என ட்விட்டரில் குறிப்பிட்டார்.

ஊரடங்கால் வீட்டில் அடைந்து கிடப்போர், மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் சில நிமிடங்களில் அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார். இதேபோல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும், தோனி ஓய்வு குறித்த தகவலை மறுத்து அவர் ட்விட்டரில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments