வெட்டுக்கிளிகளை அழிக்க களமிறங்கிய மத்திய அரசு

0 16311
வெட்டுக்கிளிகளை அழிக்க களமிறங்கிய மத்திய அரசு

ஐந்து மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதையடுத்து அவற்றை அழிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு களமிறங்கியுள்ளது. 

பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாகப் படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் பெருமளவில் பரவிப் பயிர்களை அழித்து வருகிறது.

இந்நிலையில் 5 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டத்தை அழிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பூச்சிக் கொல்லி தெளிக்கும் 89 தீயணைப்பு வாகனங்களும், 120 ஆய்வு வாகனங்களும், தெளிப்பான்கள் கொண்ட 47 கட்டுப்பாட்டு வாகனங்களும், தெளிப்பான்கள் பொருத்தப்பட்ட 810 டிராக்டர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானின் 8 மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் 7 மாவட்டங்களிலும் வெட்டுக்கிளிக் கூட்டங்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் பூச்சிக் கொல்லி தெளித்தபோது வெட்டுக்கிளிக் கூட்டம் இரு பிரிவுகளாகப் பிரிந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் விதர்ப்பா பகுதியில் 11 மாவட்டங்களுக்கும், வடக்கு மகாராஷ்டிரத்தில் 4 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்திலும் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் வாய்ப்புள்ளதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணெய், வேப்பமருந்துக் கரைசலைத் தெளிக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments