பெங்களூரில் சூறை காற்றுடன் மழை..மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் மற்றும் போக்குவரத்து பாதிப்பு

0 1048
பெங்களூரில் சூறை காற்றுடன் மழை..மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் மற்றும் போக்குவரத்து பாதி

பெங்களூருவில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில், பீன்யா, யஷ்வந்த்பூர், ஹென்னூர், கிருஷ்ணராஜபுரம், மாரத்தஹள்ளி, கெங்கேரி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments