சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் எட்டு பேர் பலி

0 5640

சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பலி  எண்ணிக்கை நூறைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு, மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவான விகிதத்தில்தான் உள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று வரை 133 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 95 பேர். இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியில் இருந்த 58 வயதான தலைமை செவிலியர், கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட புளியந்தோப்பை சேர்ந்த 65 வயது ஆண், கடந்த 24ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட, புரசைவாக்கத்தை சேர்ந்த 60 வயது பெண், கே.கே.நகரை சேர்ந்த 46 வயது ஆண், பழைய வண்ணாரப்பட்டையை சேர்ந்த 70 வயது ஆண், கடந்த 25ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட விருகம்பாக்கத்தை சேர்ந்த 36 வயது ஆண் ஆகியோர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளனர். மேலும் 2 ஆண்கள், ஒரு பெண் என சிகிச்சையில் இருந்த 8 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர், நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். கே.கே.நகரைச் சேர்ந்த 38 வயதான நபர், கடந்த 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார். புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த 88 வயதான முதியவர் கொரோனா தொற்று ஏற்பட்டு நேற்று மாலை அனுமதிக்கப்பட்ட நிலையில், அடுத்த அரை மணி நேரத்திற்குள் உயிரிழந்துள்ளார்.

திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த 51 வயதான நபர் கடந்த 23-ந் தேதி அனுமதிக்கப்பட்டு இரவு 12 மணியளவில் உயிரிழந்தார். கடந்த 26-ஆம் தேதி முதல் சிகிச்சையில் இருந்த செங்குன்றத்தைச் சேர்ந்த 50 வயதான நபரும் உயிரிழந்தார். இதையடுத்து சென்னையில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை நூறைக் கடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments