வட மாநிலங்களில் நிலவி வந்த கடும் வெயிலிருந்து விடுதலையாகி, சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு - IMD

0 830
வட மாநிலங்களில் நிலவி வந்த கடும் வெயிலிருந்து விடுதலையாகி, சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு - IMD

வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த அனல் காற்றில் இருந்து விடுதலையாகி, சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் மேற்கு, வடமேற்கு, மத்திய மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகக் கடுமையான வெப்பம் நிலவியது. கடந்த 5 நாட்களில் சராசரியாக 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. செவ்வாயன்று ராஜஸ்தானின் சுரு என்னுமிடத்தில் மிக அதிக அளவாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

இந்நிலையில் மேற்கிலிருந்து காற்றுவீசத் தொடங்கும் என்பதால் அடுத்த 3 நாட்களில் மேற்கு, வடமேற்கு, மத்திய மாநிலங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. இதன்விளைவாகப் பல பகுதிகளில் லேசான மழை முதல் இடியுடன் கூடிய மழை வரை பெய்யக் கூடும் என்றும் கணித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments