நாட்டில் வெறும் 9 நாள்களில் மேலும் 50,000 பேருக்கு கொரோனா உறுதி

0 855

நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்ட 109 நாள்கள் ஆன நிலையில், அதற்கடுத்து வெறும் 9 நாள்களில் மேலும் 50,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அத்தொற்று பரவும் வேகம் அதிகரித்திருப்பதையே காட்டுகின்றன.

மத்திய சுகாதாரத் துறை கடந்த 19ம் தேதி காலை வெளியிட்ட புள்ளி விவரங்களில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியிருந்தது. புதிதாக வெளியான தகவல்களின் படி, நாட்டில்  கொரோனா  பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்ட 109 நாள்களானதும், இதற்கடுத்து வெறும் 9 நாள்களில் மேலும் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதும் தெரிய வருகிறது.

நாட்டில் கொரோனா பாதித்தோரில் 37 சதவீதம் பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments