ரஷ்யாவில் 48 மணி நேரம் இடைவிடாமல் முடித்திருத்தம் செய்து சலூன் கடைகாரர் சாதனை

0 698

ரஷ்யாவில் தொடர்ந்து 2 நாள்களாக தூங்காமலேயே 90க்கும் மேற்பட்டோருக்கு சலூன் கடைகாரர் ஒருவர் முடித்திருத்தம் (சிகை அலங்காரம்) செய்து சாதனை புரிந்துள்ளார்.

கோஸ்ட்ரோமா பகுதியை சேர்ந்த விலாடிஸ்லாவ் டேமிடோவிச் என்பவர் திங்கள்கிழமை அப்பணியை தொடங்கி புதன்கிழமை வரை 48 மணி நேரம் செய்தார். இடை இடையே உணவருந்த நேரம் எடுத்துக் கொண்ட அவர், பணியை தொடர்ந்தார்.

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்து இப்பணியை அவர் மேற்கொண்டார். இந்த சாதனையை கின்னஸ் அமைப்புக்கு அனுப்ப அக்கடை மேலாளர் திட்டமிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments