SpaceX ராக்கெட் ஏவும் பணி மழையால் ஒத்தி வைப்பு

0 1018
SpaceX ராக்கெட் ஏவும் பணி மழையால் ஒத்தி வைப்பு

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பணி மோசமான வானிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

புளோரிடாவில் உள்ள கென்னடி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி நேற்று இரவு 8.30 மணியளவில் ஃபால்கன் 9 ராக்கெட்டை ஏவுவதற்கான ஆயத்தப்பணிகள் நடந்தன. இதில் நாசாவைச் சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக்ளஸ் ஹர்லி ஆகியோர் செல்வதாக இருந்தது. ராக்கெட் ஏவப்படுவதைப் பார்க்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் வந்திருந்தார்.

அப்போது வானிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை குறுக்கிட்டதால் ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் வானிலை சீரானதும் அதிகாலை 2.30 மணியளவில் ராக்கெட்டை மீண்டும் ஏவுவதற்கான பணிகள் தொடர்ந்து நடந்தன. இதற்காக வீரர்கள் இருவரும் ஆய்வு மையத்திலிருந்து புறப்பட்டு ராக்கெட்டில் அமர்ந்தனர்.

ஆனால் மோசமான வானிலை தொடர்ந்ததால் ராக்கெட்டை ஏவும் பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பால்கன் 9 ராக்கெட் வரும் சனிக்கிழமை ஏவப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments