மெதுவாகச் சாலையைக் கடந்த முள்ளெலிக்கு உதவிய காகம்

0 1299
மெதுவாகச் சாலையைக் கடந்த முள்ளெலிக்கு உதவிய காகம்

லாத்வியா நாட்டில் முள்ளெலிக்கு சாலையைக் கடக்க காகம் ஒன்று உதவி செய்த காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஆக்ரஸ் என்ற இடத்தில் வாகன ஓட்டி ஒருவர் தனது காரினை செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே காகம் ஒன்று விளையாடியதைப் பார்த்த அவர், அருகில் சென்று பார்க்கும்போது, முள் எலி ஒன்றை காகம், சாலையைக் கடக்க உதவி செய்வது தெரியவந்தது.

மெதுவாகச் சென்ற முள்ளெலியை கொத்திய காகம், அதன் பின்பகுதியில் கொத்தி அதனை முன்னேறிச் செல்ல உதவியது. ஆனாலும் பயத்தின் காரணமாக முள்ளெலி பதுங்கிய போதெல்லாம் காகம் அதற்கு ஊற்சாகமூட்டி, ஒருவழியாக சாலையைக் கடக்கச் செய்த பின் தன் வழியில் பறந்து சென்றது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments