விஜய் மல்லையா இந்தியா அழைத்து வருவதில் மேலும் சில மாதம் தாமதம்?

0 761
விஜய் மல்லையா இந்தியா அழைத்து வருவதில் மேலும் சில மாதம் தாமதம்?

வங்கிக் கடன் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லய்யாவை இந்தியா அழைத்து வருவதற்கு சிபிஐ கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போதும் அது மேலும் சில மாதங்கள் தாமதமாகக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் சட்டப்படி ஒருவர் அடைக்கலம் நாடி விண்ணப்பம் செய்தால் அவர் நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிக்க முடியும். இதனால் விஜய் மல்லய்யாவும் இச்சட்டத்தைப் பயன்படுத்தி மனு அளித்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதனை ஏற்று பிரிட்டன் உள்துறை அமைச்சகம் விஜய் மல்லய்யாவின் நாடு கடத்தல் முடிவை ஒத்தி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மே 14 முதல் 28 நாட்களுக்குள் விசாரணைக்காக விஜய் மல்லய்யா இந்தியா அழைத்து வரப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது இன்று வரை தொடங்கவில்லை.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments