சீனாவால் இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை என சீனத்தூதர் அறிவிப்பு

0 15934
சீனாவால் இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை என சீனத்தூதர் அறிவிப்பு

சீனாவால் இந்தியாவுக்கும் இந்தியாவால் சீனாவுக்கும் எந்த வித ஆபத்தும் இல்லை என்று சீனத் தூதர் சுன் வெல்டாங் ( Sun Weldong) உறுதியளித்துள்ளார்.

இருநாடுகளும் எல்லைப் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையே லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இருதரப்பினரும் படைகளைக் குவித்து வருகின்றனர்.

பதற்றத்தைத் தணிக்க இருநாட்டு ராணுவ உயரதிகாரிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வெல்டாங் டெல்லியில் சில குறிப்பிட்ட செய்தியாளர்களிடம் மட்டும் பேசுகையில், இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை என உறுதியளித்தார்.

நமது வேறுபாடுகளை சரியான கோணத்தில் பார்க்க வேண்டும் .அது எப்போதும் இருநாட்டு நல்லுறவுகளை பாதிக்கவிடக்கூடாது என்றும் சீனாவும் இந்தியாவும் ஒருவருக்கு ஒருவர் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும் நாடுகள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments