கொரோனா சிறப்புவார்டில் பணியாற்றிய செவிலியர்கள் 7 பேருக்கு நோய்த்தொற்று உறுதி

0 1155

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றிய செவிலியர்கள் 7 பேர் உள்ளிட்ட 21 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றுவரை 243 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர்கள் 7 பேர், மும்பையிலிருந்து வந்த ஏழு பேர் கேரளா, சென்னை காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என மொத்தம் 21 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 264 ஆக உயர்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments