ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் மோதல்

0 786

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.

கடப்பா மாவட்டம் பாயலகொண்டா என்ற சிற்றூரில், கிராம செயலாக்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பத்வேல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடசுப்பா ரெட்டி கலந்து கொண்டார்.

அப்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் யோகானந்த ரெட்டி ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு, ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் 8 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments