கர்நாடகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் எடியூரப்பா கோரிக்கை

0 409

கர்நாடகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் முதலமைச்சர் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டுத் தலங்களை ஜூன் ஒன்றாம் தேதி முதல் திறக்க அனுமதிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

நான்காம் கட்ட ஊரடங்கில் விதிகள் தளர்த்தப்பட்டதால் பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து ஆகியன தொடங்கப்பட்டுள்ளன. அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

மக்களின் நடமாட்டத்துக்கு இருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்கவும் அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக வியாழனன்று நடைபெறும் மாநில அமைச்சரவைக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments