கள்ளக்காதலால் குடும்பத்தைப் பிரிந்து சென்ற செவிலியர் மீது கணவரும் மகன்களும் தாக்குதல்

0 1663

பெரம்பலூரில் கள்ளக் காதலால் குடும்பத்தைப் பிரிந்து சென்ற செவிலியர் மீது அவர் கணவரும் மகன்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மணப்பறவையைச் சேர்ந்த கண்ணன் - ஜெயா ஆகியோருக்கு இரு மகன்கள் உள்ளனர். செவிலியரான ஜெயா பெரம்பலூர் மாவட்டம் லப்பைக் குடிக்காட்டில் பணியாற்றிய போது ஆம்புலன்ஸ் ஓட்டுநருடன் பழகியுள்ளார். இதனால் கண்ணனுக்கும் ஜெயாவுக்கும் இடையே பலமுறை தகராறு ஏற்பட்ட நிலையில், ஜெயா திடீரென வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டார்.

பெரம்பலூர் அருகே ரெங்கநாதபுரத்தில் ஜெயா பணியாற்றுவதைக் கண்டுபிடித்த கண்ணனும் அவர் மகன்களும் தங்களுடன் வந்துவிடுமாறு கூறியுள்ளனர்.

வர மறுத்த அவர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணனும் அவர் மகன்களும் கதவை உடைத்து உள்ளே சென்று அவரைத் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெயா உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிந்த பெரம்பலூர் காவல்துறையினர் கண்ணனிடமும் அவர் மகன்களிடமும் விசாரணை நடத்தினர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments