மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை குறைப்பது, சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

0 4805

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது, சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாடு வகுப்பறை நோக்கின்' என்ற செயலியை அவர் தொடங்கி வைத்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆய்வு விவரங்களை இந்த செயலியில் பதிவிடுவதன் மூலம் வகுப்பறைக் கல்வி தொடர்பான வெளிப்படைத் தன்மை உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஆன்லைன் வகுப்புகளுக்கு எந்த தடையும் இல்லை என்றும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்பு எடுக்க தான் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments