கட்டமைக்கும் இந்தியா.. பதற்றத்தில் சீனா..!

0 36349

இரு நாட்டு கட்டுப் பாட்டு எல்லைப் பகுதிகளில், இந்தியா, சாலை, விமான இறங்குதளம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதே சீனாவின் ஆத்திரத்திற்கும், அதன் துருப்புகளுன் அத்துமீறல்களுக்கும் காரணம் என கூறப்படுகிறது.

சுமார் 3500 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்திய-சீன எல்லையில், கடந்த சில ஆண்டுகளாக, லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரைஇந்தியா அமைக்கும் சாலைகளால், இந்தியாவின் ராணுவ போக்குவரத்தும், போர் நடவடிக்கைளும் அதிகரிக்கும் என சீனா அஞ்சுகிறது.

அத்துடன் சர்ச்சைக்கு உரிய எல்லைப் பகுதிகளில் தனது சாலை மற்றும் விமானப் போக்குவரத்து ஆதிக்கத்திற்கு இந்தியாவின் கட்டமைப்பு வளர்ச்சி சவாலாக மாறி விடும் எனவும் சீனா நினைப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்தியா அமைத்து முடித்துள்ள 225கிலோ மீட்டர் நீளமுள்ள தர்பூக்-ஷ்யோக்-தவுலத் பேக் ஹோல்டி எனப்படும் DBO சாலைக்கு துணைச் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைப்பதை சீனா எதிர்க்கிறது. கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் இந்திய துருப்புகளுடன் மோதலில் ஈடுபட்டதற்கும் இதுவே காரணம் என கருதப்படுகிறது. 

காரகோரம் கணவாயில் முடியும் இந்த சாலையால் எல்லையில் உள்ள தப்சாங் மற்றும் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதிகளை இந்திய ராணுவம் எளிதில் சென்றடையும் என்பதும் சீனாவின் வயிற்றெரிச்சலுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

லடாக் மற்றும் அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள பழைய விமானமிறங்கும் தளங்களை இந்தியா சீரமைத்து, குளோப்மாஸ்டர்,சூப்பர் ஹெர்குலிஸ் போன்ற பிரம்மாண்ட போர் விமானங்களை இறக்கி தனது திறனை நிரூபித்துள்ளது.

குறிப்பாக உலகிலேயே மிகவும் உயரமாக 16 ஆயிரத்து 164 அடி உயரத்தில் DBO வில் உள்ள நமது விமான இறங்குதளம் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள அகாசி சின்னுக்கு மிக அருகில் இருப்பதும் சீனாவின் தூக்கத்தை கலைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments