சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 2,145ஆக அதிகரிப்பு

0 1512

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 145ஆக அதிகரித்துள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்து 640ஆக உயர்ந்துள்ளது. ராயபுரம் மண்டலத்துக்கு அடுத்து அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 525 பேரும், திரு வி.க. நகர் மண்டலத்தில் ஆயிரத்து 285 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 262 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 160 பேருக்கும், அண்ணாநகர் மண்டலத்தில் 975 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தோரில் 60 புள்ளி 4 சதவீதம் பேர் ஆண்கள் ஆவார்கள். 39 புள்ளி 94 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். 5 ஆயிரத்து 504 பேர் குணமான நிலையில், 5 ஆயிரத்து 967 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். 15 மண்டலங்களிலும் மொத்தம் 89 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments