கலைஞர் அறக்கட்டளை சார்பில் இதுவரை ரூ.5 கோடி உதவி தொகை

0 3710
கலைஞர் அறக்கட்டளை சார்பில் இதுவரை ரூ.5 கோடி உதவி தொகை

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ஏழை, எளியோரின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்கு இதுவரை சுமார் 5 கோடி ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது என திமுக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அறக்கட்டளை சார்பில் 4 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டி தொகையை வைத்து ஏழை, எளியோருக்கு உதவி செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு வட்டியாக கிடைத்த தொகையில் 16 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 4 லட்சம் ரூபாய் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments