அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலி ஒரு லட்சத்தைத் தாண்டியது

0 562
அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலி ஒரு லட்சத்தைத் தாண்டியது

கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

வைரஸ் தொற்றின் மையமாக மாறிப்போன அந்நாட்டில் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பெருந்தொற்று ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 25 ஆயிரத்தைக் கடந்தது. மேலும் இன்று காலை நிலவரப்படி 736 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கொரானா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 500 ஆக உயர்ந்துள்ளது.

இந்த எண்ணிக்கை வியட்னாம் போரில் இறந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை விட இருமடங்கு அதிகமாகும். மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் அங்கு மரணிப்போர் எண்ணிக்கை அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் 4 லட்சத்து 78 ஆயிரம் பேருக்கு மேல் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் 11 லட்சத்து 46 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments