ஆடை அமலாபால் போல கொடுமை ! ஸ்பைடர் மேன் கைது !

0 6590
ஆடை அமலாபால் போல கொடுமை ! ஸ்பைடர் மேன் கைது !

ஆடை படத்தின் நாயகி அமலா பால் போல இளம் பெண் ஒருவரை அலுவலகத்தில் ஆடையின்றி அமரவைத்து சித்ரவதை செய்ததாக டிடெக்ட்டிவ் நிறுவன உரிமையாளர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். விபரீத ஆசையால் போலீஸ் வலையில் சிக்கிய டிடெக்டிவ் ஸ்பைடர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

மதுரை ஊமச்சிகுளம் அன்னை வேல் நகரை சேர்ந்தவர் கணேஷ் ஆனந்த்... 28 வயதான இவர், அய்யர் பங்களா பகுதியில் ஸ்பைடர் டிடெக்டிவ் என்ற பெயரில் துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தனது நிறுவன பணிக்கு ஆட்கள் தேவை என்று olx ல் விளம்பரப்படுத்தியுள்ளார்...

இதனை பார்த்துவிட்டு இவரது அலுவலகத்திற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்னர் செல்லூரை சேர்ந்த சுமையா என்ற பெண் நேர்முகத்தேர்வுக்கு சென்றுள்ளார். தன்னுடைய சுயவிவரங்களை அங்கிருந்த கணேஷ் ஆனந்திடம் ஒழிவு மறைவின்றி விவரித்துள்ளார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சார்ட்டடு அக்கவுண்டு படித்து வந்த சுமையா, சென்னையில் வசித்து வந்த கால கட்டத்தில் மதுரையை சேர்ந்த டிப்டாப் இளைஞர் சேக் தாவூது என்பவரை 5 வருடமாக முகநூல் மூலம் காதலித்துள்ளார்.

திருமணத்துக்கு முன்பாக நேரில் சந்தித்து எல்லை மீறிவிட்டு நழுவ நினைத்த காதலனை, கடந்த ஒன்றே முக்கால் வருடத்திற்கு முன்பு அங்குள்ள ஜாமாத்தார் துணையுடன் போராடி திருமணம் செய்துள்ளார்.

இதற்காக வைஷ்ணவி என்ற தனது பெயரை காதலன் சமூக வழக்கப்படி சுமையா என மாற்றிக் கொண்டு அவனை திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின்னர் முக நூலில டிப்டாப் உடையுடன் காதலன் பதிவிட்ட புகைபடங்கள் போலி என்பதும், அவன் ஒரு கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்ததால் தான் இப்போது ஒவ்வொரு நிறுவனமாக வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டதாகவும், தனது தந்தையை பார்க்க ஆவலாக இருப்பதாகவும், டிடெக்டிவ் ஆபீசர் கணேஷ் ஆனந்திடம் சுமையாக மனம் விட்டு பேசியதாக கூறப்படுகின்றது.

இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட கணேஷ் ஆனந்த், சுமையாவை தனது நிறுவனத்தில் உடனடியாக பணிக்கு தேர்வு செய்துள்ளார். சில தினங்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வந்த நிலையில் அவ்வப்போது அலுவலகத்திற்கு அழைத்து சுமையாவுக்கு ஆறுதல் கூறி வந்ததால், சுமையா மீது அதிக அக்கறைக் கொண்டவராக காட்டிக் கொண்ட கணேஷ் கடந்த 23ஆம் தேதி சுமையாவை அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார்.

அலுவலகத்தில் வைத்து சுமையாவிடம் கணவரை பிரிந்து தன்னுடன் வாழவரவேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகின்றது. மறுத்ததால் சுமையாவை கடுமையாக தாக்கி ஆடைகளை களைந்து அவரை நிர்வாணமாக அமரவைத்து வீடியோ பதிவு செய்ததாகவும், கணவனிடம் தலாக் பெற்று வரவில்லையென்றால் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என்று சித்ரவதை செய்ததாகவும் கணேஷ் ஆனந்த் மீது குற்றஞ்சாட்டுகிறார் சுமையா.

மேலும் கெஞ்சி கூத்தாடி தப்பி வந்து, தனது கணவர் உயிருக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காக கணவரிடம் தலாக் சொல்லி பிரிய தயாரானதாக வேதனை தெரிவித்துள்ளார்.

அலுவலகம் சென்று வந்த சில தினங்களில் தலாக் சொல்லும் அளவுக்கு என்ன? நடந்தது என சுமையாவின் சித்தப்பா விசாரித்த போது, கணேஷ் ஆனந்த் வீடியோ எடுத்து மிரட்டிய தகவல் அம்பலமானது. இதையடுத்து இதுகுறித்து தல்லாக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் மானபங்கம் படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஸ்பைடர் மேன் கணேஷ் ஆனந்தை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் பல பெண்கள் தன்னை போல பாதிக்கப்பட்டுள்ளதாக சுமையா தெரிவித்ததன் பேரில் ஸ்பைடர் நிறுவனத்தில் சோதனை நடத்தி அங்கிருந்து சிசிடிவி காமிரா காட்சி பதிவுகளையும், கம்ப்யூட்டர்கள் மற்றும் ஹார்டு டிஸ்க்குகளையும், செல்போன்களையும் பறிமுதல் செய்து அதில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே கணேஷ் ஆனந்த் தரப்பில் செல்லூர் போலீசில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சுமையாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தன்னிடம் உதவி கேட்டதால் தான் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்த போது, கணவரும் உறவினர்களும் சேர்ந்து தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார்

படிக்கின்ற வயதில் முகநூல் காதலில் மூழ்கியதால் படிப்பை மட்டுமல்ல , நல்ல வாழ்க்கையையும் தொலைத்த அந்த பெண், வேலைதேடிச் சென்ற இடத்தில் 3ஆவது நபரிடம், குடும்ப உள் விவகாரங்களை ஒளிவு மறைவின்றி சொன்னதால், இந்த விபரீத சம்பவம் அரங்கேறி இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments