பேசாத காதலிக்காக பெற்றோரை மறந்த கல்லூரி மாணவர்..! தூக்கில் தொங்கினார்

0 13731
பேசாத காதலிக்காக பெற்றோரை மறந்த கல்லூரி மாணவர்..! தூக்கில் தொங்கினார்

கல்லூரியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி படிக்கவைத்த பெற்றோரை மறந்து, உடன் படிக்கும் மாணவி பேசவில்லை என்பதற்காக சென்னையில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை மணலி துர்கை அவென்யு பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் நடராஜன். தனியார் பொறியியல் கல்லூரியில், பி.இ.படித்து வந்த இவர் ஞாயிற்றுக்கிழமை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணலி போலீசார் மாணவர் நடராஜனின் உடலை மீட்டு பிணகூறாய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர் நடராஜன் பயன்படுத்திய ஸ்மார்ட் போனை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்த காவல்துறையினர், காதல் பிரச்சனையால் நடராஜன் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டதைக் கண்டறிந்தனர்.

நடராஜன் தன் உடன் படிக்கும் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் வேறு மாணவனிடமும் சிரித்து பேசி பழகியதைக் கண்ட நடராஜன் ஆத்திரத்தில் சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது. இதனால் அந்த பெண் நடராஜனுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகின்றது.

அந்த பெண்ணை சமாதானப்படுத்துவதற்கு ஏராளமான முறை வாட்ஸ் ஆப்பில் குரல் பதிவுகளையும், குறுந்தகவல்களையும் அனுப்பியுள்ளார் நடராஜன். மாணவி சமாதானம் அடையாததால் இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாக அவருக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்

அன்பையும், பாசத்தையும் கொட்டி வளர்த்த தனது தாய் தந்தையர் லட்சக்கணக்கில் பணத்தை கட்டி பொறியியல் படிக்க வைத்ததை கூட உணராமல், உடன் படித்த மாணவி தன்னுடன் பேச மறுத்ததால் உயிரை மாய்த்துக் கொண்டது இன்றைய இளைஞர்களின் தன்னம்பிக்கை இல்லாத கோழைத்தனம் என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதே நேரத்தில் படிக்கின்ற காலத்தில், காதலில் விழுந்து செல்போனில் வாட்ஸ் ஆப் சாட்டிங்கில் மூழ்கினால், என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக மாறி இருக்கின்றது இந்த சோக சம்பவம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments