மும்பை ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்...

0 1025
மும்பை ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்...

மும்பையில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்வதற்கு போதிய ரயில்கள் இயக்கப்படாத நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கானோர் மும்பை ரயில்நிலையங்களில் குவிந்தனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பையை விட்டு வெளியேற பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரயில் நிலையங்களில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மும்பையின் சத்ரபதி சிவாஜி, குர்லா லோக் மான்ய திலக், வசாய், பாந்த்ரா உள்ளிட்ட ரயில்நிலையங்களில் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக திரண்டிருந்தனர். திடீரென ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பெரும்பாலோர் ரயில்நிலையங்களிலேயே பலமணிநேரம் காத்திருக்க நேரிட்டது.

வசாய் ரயில் நிலையத்தில் இருந்து 6 ரயில்கள் இயக்கப்படுவதாக தகவல் அறிந்து ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் ரயில் நிலையத்தில் பலமணி நேரமாக காத்திருந்தனர்.இதில் ஒருவர் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்ட்ராவுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 145 ரயில்களை அனுப்ப முன்வந்தபோதும், மாநில அரசின் அனுமதி கிடைக்காததால் 39 ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகளை ரயில் நிலையத்திற்கு அழைத்து வர மாநில அரசு எந்தவித போக்குவரத்து வசதியும் செய்யவில்லை என்பதால் பயணிகள் குறைவாக இருந்ததால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு 49 ரயில்களை இயக்குவதாக கூறிய போதும், 15 ரயில்களுக்கு மேல் அனுமதி கிடையாது என்று மண்டல ரயில்வே இயக்குனர் கூறியதாக மகாராஷ்ட்ர அமைச்சர் நவாப் மாலிக் டிவிட்டரில் கூற, அதற்கு பதில் அளித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கை விடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ரயில்களை இயக்கத் தயார் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments