கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நாடுகள், உடனடியாக இரண்டாவது அலையை எதிர்கொள்ளக்கூடும்- WHO எச்சரிக்கை

0 1762

கொரோனா தொற்று குறைந்துள்ள நாடுகளில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தளர்த்தினால், இரண்டாம் கட்ட தொற்று அலை வீசி அடிக்கும் என, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் ஆன்லைனில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால சேவைகள் துறை இயக்குநர் மைக் ரேயான், உலகம் இப்போது கொரோனா அலையின் முதல் கட்டத்தின் மத்தியில் இருப்பதாக கூறினார்.

பல நாடுகளில் தொற்று குறைந்துள்ள நேரத்தில் அமெரிக்க நாடுகள், தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அதன் தாக்கம் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய தொற்று நோய்கள் எப்போதும் அலை அலையாகத் தான் வரும் என்ற மைக் ரேயான், முதற்கட்ட அலை ஓய்ந்த நாடுகள் இந்த ஆண்டு இறுதியில் இரண்டாம் கட்ட அலையை சந்திக்க நேரிடும் என்றார். உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை, பல தளர்வுகளை அறிவித்துள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments