அமெரிக்காவில் சிக்கிய 300 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் மீட்பு

0 1587

பயணத் தடைகளால் அமெரிக்காவில் சிக்கித் தவித்த 300 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் பெங்களூருவுக்கு வந்து சேர்ந்தனர்.

வெளிநாட்டு இந்தியர்களை மீட்கும் வந்தேபாரத் திட்டத்தின் கீழ் நியூ யார்க்கில் இருந்து புறப்பட்ட இந்த நான்காவது சிறப்பு விமானத்தில் பயணிக்க பலர் பதிவு செய்தாலும் பயணத்திற்கான முக்கியத்துவ அடிப்படையில் 329 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். 

வந்தேபாரத் திட்டத்தின் இந்த இரண்டாம் கட்டத்தில் நியூ யார்க்கில் இருந்து டெல்லி, சண்டிகர்,பெங்களூருவுக்கு இரண்டு விமானங்களும், சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூரு, கொச்சி, ஐதராபாத் அகமதாபாதிற்கு 2 விமானங்களும் இயக்கப்பட உள்ளன. சிகாகோவில் இருந்து டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு 2 விமானங்களும்,வாஷிங்டனில் இருந்து பெங்களூரு மற்றும் அகமதாபாதிற்கு ஒரு விமானமும் இயக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments