கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று

0 2895

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இன்று மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை குறித்த விவரங்களை முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார். அதில் புதிதாக 67 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாகவும், இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 964ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதித்தோரில் மருத்துவமனைகளில் 415 பேர் தற்போது சிகிச்சை பெறுவதாகவும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 10 பேர் குணமாகி வீடு திரும்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments