தமிழ்நாட்டில் இன்று 646 பேருக்கு கொரோனா

0 5093

தமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 646 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 49 பேர் மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், டெல்லி, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். துபாயில் இருந்து வந்த 5 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 9 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு 127 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 8256 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 ஆயிரத்து 906 பேர் தனிமை வார்டுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 68 ஆய்வகங்களில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 289 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுவரை 4 லட்சத்து 31 ஆயிரத்து 739 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 611 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து இருப்பதாகவும், இதுவரை 9 ஆயிரத்து 342 பேர் மீண்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments