சென்னையில் இருசக்கர வாகனங்களின் விற்பனை கடும் பாதிப்பு

0 3843

சென்னையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணத்தினால் இருசக்கர வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மூடப்பட்ட இருசக்கர சோரூம்கள், சுமார் 2 மாத இடைவெளிக்கு பிறகு அண்மையில் பல்வேறு நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் முன்பு இருந்தது போல வாகன விற்பனை இல்லை எனவும், விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

மாதம் ஒன்றுக்கு ஷோரூம் ஒன்றில் சராசரியாக 100 முதல் 120 வாகனங்கள் விற்பனையாகும் எனவும், ஆனால் தற்போது ஒரு வாகனம் கூட விற்க மூடியாமல் தவித்து வருவதாகவும் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் சர்வீஸ் வாகனங்களின் எண்ணிக்கையும் பெரிதும் குறைந்து விட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments