ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 சரிவு

0 58342

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 472 ரூபாய் இன்று குறைந்துள்ளது.

நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 544ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை 59 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 485 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை நேற்று 36 ஆயிரத்து 352 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 35 ஆயிரத்து 880 ரூபாயாக சரிந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 21ம் தேதி ஒரு சவரனுக்கு 35 ஆயிரத்து 896 ரூபாயாக இருந்தது. இதையடுத்து 36 ஆயிரம் ரூபாயை தாண்டி விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில் தற்போது 36 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே விலை குறைந்துள்ளது. அதேநேரத்தில், வெள்ளியின் விலை இன்று சிறிது உயர்ந்துள்ளது.

52 ஆயிரத்து 100 ரூபாயாக நேற்று இருந்த ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று 300 ரூபாய் அதிகரித்து 52 ஆயிரத்து 400 ரூபாயாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments