குரங்குகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தக்கூடிய முன்மாதிரி தடுப்பூசி கண்டுபிடிப்பு

0 2549

குரங்குகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தக்கூடிய முன்மாதிரி தடுப்பூசி ஒன்றை போஸ்டன் மருத்துவ ஆய்வு நிறுவன விஞ்ஞானி டாக்டர் டான் பரூச் கண்டு பிடித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் தீவிரமாக இருக்கும் ஜான்சன் &ஜான்சன் நிறுவனத்துடன் இணைந்து அவர் நடத்திய இந்த ஆராய்ச்சியில்,  9 ரீசஸ் குரங்குகளின் உடலில்  கொரோனா வைரசுகள் செலுத்தப்பட்டன. அத்துடன் இந்த முன்மாதிரி தடுப்பூசியும் அவற்றுக்கு போடப்பட்டது.

சில தினங்களில் நுரையீரல் பாதிப்பு, நிமோனியா உள்ளிட்ட  தொற்றின் அறிகுறிகளை குரங்குகள் காட்டின. அதன் பின்னர் அவற்றின் ஆன்டிபாடீஸ் திறன் அதிகரித்ததை தொடர்ந்து தொற்றில் இருந்து முற்றிலும் விடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

35 நாட்களுக்குப் பிறகு அந்த குரங்குகளுக்கு மீண்டும் கொரோனா வைரசுகள் செலுத்தப்பட்ன. அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் குரங்குகளின் உடலில் அபரிதமான ஆன்டிபாடீஸ் உருவாகி வைரசுகள் அழிக்கப்பட்டது உறுதியானது.

குரங்குகளிடம் கிடைத்துள்ள தடுப்பூசி பலன் மனிதர்களிடமும் கிடைக்குமா என்பது உறுதியாகாத நிலையில், இந்த முடிவுகள் கொரோனா தடுப்பூசியை  விரைவில் கண்டுபிடித்துவிடலாம் என ஊக்கமளிப்பதாக டாக்டர் டான் பரூச் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments