மக்னீசிய உலோகக் கலவையை கண்டுபிடித்து சென்னை ஐ.ஐ.டி. சாதனை

0 4944
மக்னீசிய உலோகக் கலவையை கண்டுபிடித்து சென்னை ஐ.ஐ.டி. சாதனை

ஸ்டீல் மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோகக் கலவையை கண்டுபிடித்து சென்னை ஐ.ஐ.டி. சாதனை படைத்துள்ளது.

அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சென்னை ஐ.ஐ.டி. மக்னீசிய உலோகக் கலவையை உருவாக்கி உள்ளது. வாகனங்கள் மற்றும் விமானம், விண்கலம் தயாரிப்பில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்டீல் மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசியம் உலோகக் கலவை உருவாக்கப்பட்டுள்ளது.

அதிக திறனுடன், எடை குறைவானதாக மக்னீசியம் உலோக கலவை வடிவமைக்கப்பட்டுள்ளதால், குறைந்த எடையிலான வாகனங்களை உருவாக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எரிபொருள் செலவு மற்றும் கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments