பி.சி.எஸ். படிப்பு, பி.காம் படிப்புக்கு இணையானது என சான்று வழங்க உத்தரவு

0 529

பி.சி.எஸ். பட்டப்படிப்பு, பி.காம் படிப்பிற்கு இணையானது என்று சான்று வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் மின்பகிர்மான பிரிவில் கணக்கு உதவியாளராக பணியாற்றி வரும் கலைவாணி என்பவர் தொடர்ந்த வழக்கில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரியில் தான் பயின்ற இளங்கலை கார்ப்பரேஷன் செயலாளர் பட்டப்படிப்பினை B.Com பட்டப்படிப்புக்கு இணையானது என சான்று வழங்க உத்தரவிட கோரியிருந்தார்.

அரசாணை இருந்தும் பல்கலைக்கழகம் இது தொடர்பாக சான்று வழங்க மறுப்பதால் தனது பதவி உயர்வு கேள்விக்குறியாகி உள்ளதாவும் மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பி.சி.எஸ். பட்டப்படிப்பு, பி.காம் படிப்பிற்கு இணையானது என்று சான்று வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments