சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 594லிருந்து 420ஆக குறைவு

0 837

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 594லிருந்து 420ஆக குறைந்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு தெருவில் 5 பேருக்கும் குறைவானவர்கள் பாதிக்கப்படடிருந்தால், தெரு முழுவதும் அல்லாமல், பாதிக்கப்பட்டோரின் வீடுகள் மட்டும் தனிமைபடுத்தப்படுகின்றன.

அதேநேரத்தில், 5 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டால் அப்பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி நிலவரப்படி, சென்னையில் 594ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்னிக்கை 420ஆக குறைந்துள்ளது.

மேலும்,14 நாட்களாக நோய்த்தொற்று பாதிப்பு இல்லாத 730 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 108 பகுதிகளும் திரு.வி.க நகர் மண்டலத்தில் 65 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments