அமெரிக்காவில் கச்சா எண்ணெய்யை சேமிப்பது குறித்து இந்தியா ஆலோசனை

0 2966

குறைந்த விலையில் வாங்கப்பட்ட கச்சா எண்ணெய்யை அமெரிக்காவில் சேமித்து வைக்க முடியுமா என  இந்தியா ஆலோசனை நடத்தி வருகிறது.

ஆஸ்திரேலியா நாடு கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில், அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதால்  அதேநாட்டில் எண்ணெய் சேமிப்பு கிடங்கை கட்ட போவதாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பேட்டியில், உள்நாட்டில் எண்ணெய் சேமிப்பு கிடங்கு நிறைந்து விட்டதால், குறைந்த விலை கச்சா எண்ணெய்யை வாங்கி, வேறு நாட்டில் சேமித்து வைக்கும் வாய்ப்பு குறித்து அரசு ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவில் ஏற்கெனவே 5 புள்ளி 33 மில்லியன் டன் கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், உலகின் பல்வேறு பகுதிகளில்  9 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யுடன் கப்பல்களை இந்தியா நிறுத்தி வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments