ஊரடங்கு பிரதமர் மோடி எதிர்பார்த்த பலனை அளித்துள்ளதா? ராகுல் காந்தி கேள்வி

0 3010

கொரோனா தொற்று வேகமாக அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும் ஒரே நாடு இந்தியா என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். கொரோனா கட்டுப்பாட்டுக்காக நான்கு முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, பிரதமர் மோடி எதிர்பார்த்த பலனை அளித்துள்ளதா என அவர் வினவினார். 

ஊரடங்கிற்குப் பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது பற்றியும், புலம் பெயர் தொழிலாளர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் என்ன செய்யப் போகிறது என்பது குறித்தும் மத்திய அரசு விளக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்வதை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, அதை கட்டுப்படுத்த மத்திய அரசு என்ன திட்டங்களை வைத்துள்ளது என கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments