600 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது UBER இந்தியா நிறுவனம்

0 1970
600 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது UBER இந்தியா நிறுவனம்

வாடகை கார் நிறுவனமான உபேர் இந்தியா 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

ஓலா நிறுவனத்தால் ஆயிரத்து 400 ஊழியர்கள் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர் சேவை, ஓட்டுநர் ஆதரவு பிரிவு, வர்த்தக மேம்பாடு, சட்டம், நிதி, கொள்கை மற்றும் சந்தை பிரிவுகளில் பணியாற்றிய 600 ஊழியர்களை உபேர் இந்தியா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

இது இந்தியாவில் அந்நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்களில் 25 சதவீதம் பேர் ஆவார்கள். பணிநீக்கம் செய்யப்பட்ட 600 ஊழியர்களுக்கும், குறைந்தபட்ச 10 வார ஊதியம், அடுத்த 6 மாதங்களுக்கான காப்பீடு ஆகியவை அளிக்கப்படும் எனவும் உபேர் இந்தியா அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments