உச்சம் தொட்ட அச்சம்... மிரட்டும் கொரோனா மிரளும் உலக சமூகம்...

0 829
உச்சம் தொட்ட அச்சம்... மிரட்டும் கொரோனா மிரளும் உலக சமூகம்...

உலகம் முழுவதும் வைரஸ் தொற்றின் பிடியில் இருந்து 23 லட்சத்து 65 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா உயிர்ப்பலி, ஒரு லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது. 

சுழலும் பூமி பந்தில் உலுக்கும் கொரோனாவால், உலகின் பல நாடுகளிலும் பாதிப்புகளும் உயிர்ப்பலிகளும் நிமிடத்திற்கு நிமிடம் உயர்ந்து வருகிறது.வல்லரசு நாடான அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 790 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, உயிர்ப்பலி ஒரு லட்சத்தை எட்டும் அளவில் உள்ளது.

பிரேசிலில் ஒரே நாளில் மட்டும் 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.ரஷியாவை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 946 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.

ஈரானில் ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, சவுதி அரேபியாவில் 2 ஆயிரத்து 235 பேரும், சிலியில் 4 ஆயிரத்து 896 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மெக்சிகோ, கத்தார் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும், தலா 2 ஆயிரம் பேருக்கு
மேல், கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், உலகம் முழுவதும் 23 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதேநேரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்
எண்ணிக்கை 55 லட்சத்து 88 ஆயிரத்தை தாண்டி விட்டது. கொரோனாவுக்கு இதுவரை, 3 லட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரை ஆகி உள்ளனர். சுமார் 53 ஆயிரம் பேர்
நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனிடையே, கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள பிரேசிலில் இருந்து அமெரிக்காவுக்கு வர, பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை வாஷிங்டன்
வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கெய்லீ மெக்லானி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments