சீக்கியர் குருதுவாராவில் புகுந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் நபர்

0 685
சீக்கியர் குருதுவாராவில் புகுந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் நபர்

இங்கிலாந்தின் லண்டனுக்கு சற்றுதூரத்தில் உள்ள டெர்பி நகரின் அர்ஜூன் தேவ் சீக்கியர் குருதுவாரா மீது பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவன் தாக்குதல் தொடுத்தான்.

பகை உணர்வு காரணமாக அவன் இந்த தாக்குதலை நடத்திய போது ஊரடங்கால் குருதுவாராவில் யாரும் இல்லாததால் விபரீதம் ஏதும் நிகழாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பல்லாயிரம் ரூபாய் மதிப்புடையை குருதுவாராவின் சொத்துகளை அந்த நபர் அடித்து நொறுக்கி சேதப்படுத்திய காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.

குருதுவாராவின் சுவர்களிலும் காஷ்மீரை குறித்த வாசகங்களை அவன் கிறுக்கினான். அவனை அடையாளம் கண்டு கைது செய்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments