பெங்களூரில் 3500 பேருந்துகள் இன்று முதல் இயங்க அனுமதி

0 16862
பெங்களூரில் 3500 பேருந்துகள் இன்று முதல் இயங்க அனுமதி

பெங்களூரில் இன்று முதல் மீண்டும் 3500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிகபட்சமாக ஒரு பேருந்தில் 30 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட ஊரடங்குக்குப் பின்னர், மாநில அரசுகளே பொதுப் போக்குவரத்து குறித்து தீர்மானிக்கலாம் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதையடுத்து கர்நாடகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

பெங்களூர் மாநகரப் போக்குவரத்துக் கழகம் 3500 பேருந்துகளுக்கு அனுமதித்துள்ளது. இன்று முதல் பயணிகள் பேருந்துகளில் பயணிக்கின்றனர். பேருந்து நிலையத்திலேயே பயணிகளுக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதனிடையே மாநிலம் முழுவதும் பேருந்து கட்டணத்தை 12 சதவீதம் வரை உயர்த்தியுள்ள கர்நாடக அரசு குறைந்த பட்ச கட்டணமாக 5 ரூபாய் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. பெங்களூர் BMTC பேருந்துகளுக்கு கட்டண உயர்வு அமலாக்கப்படவில்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments