இந்தியாவில் தவிக்கும் நூற்றுக்கணக்கான பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்ப இந்தியா நடவடிக்கை

0 877
இந்தியாவில் தவிக்கும் நூற்றுக்கணக்கான பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்ப இந்தியா நடவடிக்கை

இந்தியாவில் தவித்து வரும் 179 பாகிஸ்தானியர்களை அவர்களது நாட்டுக்குத் திரும்பி அனுப்ப இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு இரு நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடின இந்நிலையில் ஊரடங்குக்கு முன் மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உறவினர்களைக் காணவந்த பலர் ஊரடங்கால் இந்தியாவில் சிக்கித் தவித்து வருகின்றன. அவர்களில் 193 பேரை இந்தியா ஏற்கனவே திருப்பி அனுப்பிய நிலையில் மேலும் 179 பேரை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு வரவழைத்து அங்கிருந்து வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானில் கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் தவித்து வரும் 80 இந்திய மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களைத் திருப்பி அனுப்பும் விவரகாரத்தில் பாகிஸ்தான் அடம் பிடித்து வருகிறது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments