கொரோனா பிடியில் சென்னை நீடிக்கும் உச்சம் தொடரும் அச்சம்

0 2409
சென்னையில் மட்டும் ஒரே நாளில் 549 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி விட்டது.

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 549 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி விட்டது. 

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 549 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், இங்கு மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 131- ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டில் ஒரே நாளில் 54 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, திருவள்ளூரில் 37 பேரும், காஞ்சியில் 19 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருவண்ணாமலையில் 41 பேரும், ராமநாதபுரத்தில் 5 பேரும் பாதிக்கப்பட, ராணிப்பேட்டை மற்றும் விருதுநகரில் தலா 4 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.

அதேநேரம், மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில், 18 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட வில்லை .

சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 911 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை, 5 ஆயிரத்து 135 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

12 வயதுக்கு உட்பட்டவர்களில் 485 சிறுமிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 44 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 5 ஆயிரத்து 206 பெண்கள், 5 திருநங்கைகள் உள்பட 14 ஆயிரத்து 587 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, 555 மூதாட்டிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 451 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை அரசு மருத்துவமனைகளில் 4 ஆண்கள் மரணம் அடைய, தனியார் மருத்துவமனைகளில் ஒரு பெண் உள்பட 3 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

மிரட்டும் கொரோனாவை விரட்டும் பணியில் தமிழக சுகாதாரத்துறை முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருந்தபோதிலும், கொரோனாவின்கிடுக்கிப்பிடி, சென்னையை இறுக்கி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments