உலக அளவில் கொரோனா பாதிப்புகளால் இந்தியாவுக்கு 10ம் இடம்

0 2033
உலக அளவில் கொரோனா பாதிப்புகளால் இந்தியாவுக்கு 10ம் இடம்

கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முதல் 10 நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் உலக அளவிலான பாதிப்புகள் பட்டியலில், ஈரானை பின்னுக்கு தள்ளி இந்தியா 10ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் கடந்த 13 நாட்களில் பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளதால், 4ம் கட்ட ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும் அதிகளவிலான பாதிப்புகளால் 2ம் இடத்திலிருக்கும் பிரேசிலின் பாணியை அடியொற்றி இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், இந்தியாவில் தற்போது இருக்கும் பாதிப்பு, பிரேசிலில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் முதல் 10 ஆயிரம் பாதிப்புகள் பதிவாக 48 நாட்கள் பிடித்த நிலையில், கடைசி 10 ஆயிரம் பாதிப்புகள் இரண்டே நாட்களில் பதிவாகியுள்ளன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments