தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

0 1504
தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் அடுத்த 48 மணி நேரத்துக்கு மேற்கு மாவட்டங்கள், தென்மாவட்டங்கள் உட்பட 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், திருத்தணியிலும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து அனல்காற்று வீசும் எனக் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments