புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட மதுக்கடைகள்

0 627

புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் மதுபாட்டில்கள் வாங்கிச் சென்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில், புதுச்சேரியில் நீண்ட இழுப்பறிக்கு பிறகு இன்று முதல் காலை 10 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மதுபானக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மதுபானங்களின் விலை, தமிழகத்துக்கு இணையாக 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ள போதிலும், ஆர்வம் சற்றும் குறையாமல் முகக்கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். இதனிடையே முந்தைய நாட்களில் தடையை மீறி மது விற்ற 102 கடைகள் மட்டும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments