விஷப்பாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவன்

0 38967
விஷப்பாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவன்

கேரளாவில் விஷப்பாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவனும், அவனது நண்பனும் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் அஞ்ச்சல் (Anchal) நகரை சேர்ந்த உத்ரா என்ற பெண், தனது பெற்றோர் வீட்டில் இருந்த நிலையில் கடந்த மே 6ம் தேதி பாம்பு கடித்து உயிரிழந்தார். ஏற்கனவே அவரது கணவர் வீட்டிலிருந்த போதும் அவரை பாம்பு தீண்டிய நிலையில், அதில் உயிர் பிழைத்தவர் மீண்டும் 2வது முறையாக பாம்பு கடித்து உயிரிழந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர்.

இதையடுத்து கணவர் சூரஜ் மற்றும் அவனது பாம்பு பிடிக்கும் நண்பன் சுரேஷ் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், பாம்பை பயன்படுத்தி திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது. வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக ஏற்கனவே ஒரு முறை பாம்பு மூலம் நடத்திய கொலை முயற்சி பலனளிக்காத நிலையில், மீண்டும் அதே பாணியில் பாம்பை அறைக்குள் விட்டு கடிக்க செய்து மனைவியை கொலை செய்துள்ளான்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments